வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

Thursday, March 20, 2008

தயக்கத்துக்கு முதல் அடி வைத்தாகிவிட்டது

எட்டு மாதக் குழந்தை

எடுத்தடி வைக்க

நடைவண்டியில்

நடை பயணம்

மகிழ்ச்சி ஆரவாரத்தில்

மருண்டு தள்ளியதால்

வண்டி குழந்தையை

இழுத்துக்கொண்டு நின்றது

அம்மா அப்பாவின்

ஆரவாரத்துக்கிடையே

வைக்காத முதல் அடியை

வைத்தது குழந்தைஅத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, March 19, 2008

விருந்தும் மருந்தும்

வீட்டிற்கு வந்த

ஆசிரியருக்கு

விருந்தோம்ப

ஏதுமில்லை என

வெதும்பிய

கலைச்செல்வன்

அவசரமாகத் தென்னை

மரமேறி இளநீர்

பறிக்கையில்

விழுந்தது இளநீர்

அவனையும் பறித்துக்கொண்டு.


அவசரச் சிகிச்சைப் பிரிவில்

சேர்த்த ஆசிரியர்

பிரியா சோகத்துடன்.


அன்பு மட்டும்

வெளிப்பட்டது

சாரை சாரையாக...!அத்திவெட்டி ஜோதிபாரதி

சம்மந்திகளின் பிரசவ வேதனை

பிரசவ அறையில்

பிரசவ வேதனையில்

துடித்துக்கொண்டிருந்த பெண்

மருத்துவரையும் தாதிகளையும்

உதைத்தார்.

சாத்தப்பட்ட

அறைக்கு வெளியே

சாந்தமாகக் கணவன்.

ஆண்குழந்தை தான் -இல்லை

பெண்குழந்தை தான் -என

சம்மந்திகளின் சண்டை.

நான் தான்

முதலில் குழந்தையைப்

பெற்றுக்கொள்வேன் என்ற

கூக்குரல் வேறு.

வேண்டாம் வம்பு என்று

வெறுமனே நின்ற

கணவனிடன் கொடுத்து

கைப்பணம் பெற்றுக்கொண்டார் தாதி.

ஆறு மாதத்திலேயே தெரியும்

ஆண் பிள்ளை என்று

அழகாய் உரைத்தார்

குழந்தையின் தந்தை.அத்திவெட்டி ஜோதிபாரதி

Tuesday, March 18, 2008

செக்குமாடு

செக்குமாடு

கீறல் விழுந்த

இசைத்தட்டு


ஆர வட்டம்

அழியாக் கோலம்


சுகமென நினைத்து

சுற்றிச் சுற்றி


சூடான எண்ணெய்

வழ வழப் பிசுக்குடன்

பிழிந்தாலும் வராது


சுரண்டினாலும்

வராத புண்ணாக்கு

வெல்லம் மட்டும் கேட்டது

செக்கு மாடுஅத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 14, 2008

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

தினம் தினம்

கழுகாய் பருந்தாய்

வட்டமிடும்வஞ்சக வானூர்தி

கருவறுக்க

கோழிக்குஞ்சாய்

எம் மக்கள்


இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்

ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை

அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்

அரக்கர் கூட்டம்


கைக்கெட்டும் தூரத்தில்

எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு


கேட்காமல் கேட்கும்

எம் உறவுகளின் ஓலங்கள்


இவன் வாழும் நாடோ காந்தியின்

அகிம்சை வழி


நேருவின் சமாதனப்புறா-அதுவோ

முதுகில் அடித்தவனை

முழுவதும் தொழும்


தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?


கூட்டுப் பயிற்சியும்

கொஞ்சிக்குலாவலும்

நம் குல நாசம்

செய்வதற்கேயன்றி வேறெதற்கு?


ரகசியப் பேச்சுக்களும்

ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற

ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்

நலிவடைந்த உறவுகளை

நசுக்கத்தானே?


சமாதானம் என்று சொல்லி

சவ வண்டியனுப்பும்

சறுக்கிய தேசத்தின்

ஆற்றாமைத் தமிழன்

அழுகிறான் இங்கே

அவனுக்கு நாடிதுவே

வேறில்லை அவனியிலே


கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்

கயவர்கள் கூட்டம்

கட்சிக்கொடி ஏந்திக்

கல்லாக்கட்டும்


உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும்

ஒப்பனைத் தமிழன்

ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்

உடுக்கை மானம் உண்டோ அறியேன்...?அத்திவெட்டி ஜோதிபாரதி

எழில் நிலா இணைய இதழ் 29.03.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் இணைய இதழ் 31.03.2008

Thursday, March 13, 2008

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!

வெள்ளையைப் பார்த்து

வெளிரிப் போனது

தன் நிறம் மறந்து


மஞ்சளைப் பார்த்து

மறைத்துக் கொண்டது -தன்

மகிமையை


கறுப்பைப் பார்த்து

கவிழ்ந்து விட்டது

கடைச் சரக்காகி


சாயம் வெளுத்துக்கொண்டு

மகிழ்ந்திருந்தது

தன்னையே மாற்றிக் கொண்டு

சமூகப் பண்பாடு மறந்த

மாந்தளிர்...!அத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 31.03.2008
கீற்று இணைய இதழ் 01.04.2008
முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் 18.03.2008

Wednesday, March 12, 2008

நிற்காமல் நின்றுகொண்டு...

பள்ளி விட்டதும்

எங்கும் நிற்காமல்

வீட்டுக்கு வந்துவிடு

அம்மா சொன்னது

மனதில் ஒலித்தது

காத்திருந்தேன் பேருந்துக்காக


இருட்டியதும் வந்தது

பேருந்து இறுமாப்புடன்


இடம் கிடைக்குமா என்ற

ஏக்கத்துடன் படியில்

உந்தி ஏறியதும்

நிற்காமல் பறந்தனர்

நடத்துனரும் ஓட்டுனரும்


மதியம் உண்ட களைப்பில்

மயங்கிப்போய் நான்

இருக்கையில் இருக்க

இடமில்லாமல்

நின்று கொண்டே விழுந்தேன்

தூக்கம் சொக்கியதும்


இடம் வந்ததும்

இறங்கிக்கொண்டேன்

எதுவுமே தெரியாத இருட்டு

இருந்தாலும் கண்டேன்

தெரியாத தெருவும்

எரியாத விளக்கும்

அதற்குத்தான்

தெருவிளக்கென்று பேரோ?

கும்மிருட்டில் காத்திருந்த

சிற்றொளிக் கைவிளக்கு

தம்பி என்று தழுவிக்கொண்டது

என் தாய்.அத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 03.03.2008
கீற்று இணைய இதழ்

Saturday, March 8, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே

வேற்று மொழியில்

பேசிக்கொண்டு வந்த

தமிழர்கள் இருவர்

இடையிடையே

தன் தாய்த் தமிழில்

காய்களை மட்டும்

கடித்துத் துப்பினார்கள்

அக்கம் பக்கத்தினருக்கு

மட்டும் கசந்தது

அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 7, 2008

பேராசை

ஆஸ்தி உள்ளவனுக்கு

அஸ்தி கரைக்க

அகர வரிசையில்

ஆயிரம் பேர்அத்திவெட்டி ஜோதிபாரதி

முன்னுக்கு வாருங்கள்

என்னைப் பின்பற்றுகிறவர்களை

எனக்குப் பிடிக்காது

கழுதை
அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, March 6, 2008

மாசமோ மார்கழி மாசம்

பார்த்தேன் ரசித்தேன்

பசுமையானவளை

அவளுக்கு வியர்த்திருந்தது

வெண்பனியோ என்று

நினைத்துக் கொண்டேன்

நான் தொட்டவுடன்

வெட்கப்பட்டாள்

தொட்டாற் சுருங்கி
அத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, March 5, 2008

என்னை மறந்துவிட்டீர்களே?

வேகாத வெயில்

வெந்த தணல்

தண்ணீரே இல்லை

என்னை நினைத்து

எத்தனை கூக்குரல்கள்

ஒரு மழை பெய்ததும் -ஏன்

என்னை மறந்து விட்டீர்கள்?

காவிரிப் பிரச்சனைஅத்திவெட்டி ஜோதிபாரதி

Tuesday, March 4, 2008

சிங்கப்பூர் ஜுரோங் தீவு

சிங்கை ஈன்றெடுத்தக் குழந்தை
சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை

மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்

சிறப்பு அனுமதியுடன் -ஒரு
சிறிய பயணம்

கப்பல் பட்டறைகளின்
கற்பனை உலகம்
கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்

சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு
கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்

கொடிய வாயுக்களிடம்
குசலம் விசாரிப்பு

எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்
எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்

வெல்டிங் வேலையும்
விவேக சிந்தனையும்

மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்
பாரந்தூக்கி மட்டுமே இப்போது
நம் பாரத்தை தாங்கி

எறும்புகளாய்
எம் உழைக்கும் வர்க்கம்

எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்
என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்

பூங்கா போன்ற காட்சி -அதற்கு
புகை மட்டுமே சாட்சி

ஓசோன் காக்கும் ஆசான் -அந்த
ஒரே நாடு சிங்கை

மாசு இல்லை இங்கு -மண்
தூசு இல்லை எங்கும்

பொருளாதாரப் பொழில் -அது
பொங்கிவரும் எழில்

விசாலமான சாலையில்
வாகனங்கள் மட்டும் காற்றுடன்

வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்
வேறு யாரும் அங்கு இல்லை

தீயணைப்பு வண்டிகளின்
தியாக அணிவகுப்பு

அவசர நிலைக்கான
அயராத விழிப்பு நிலை

முதலுதவிக்கான
முன்னேற்பாடு

உழைக்கும் வர்க்கமே
உழலும் சொர்க்கமே

வந்தது நமக்கு வியர்வை -அது
தந்தது நமக்கு உயர்வை

குருதி வருமென்றாலும் -அது
இறுதி அல்லவே

உழைப்பு மட்டுமே உறுதி -நம்
உன்னத வாழ்க்கையைக் கருதிஅத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 10.02.2008
திண்ணை இணைய இதழ் 07.02.2008
கீற்று இணைய இதழ்
தமிழ் சிஃபி சித்திரைச் சிறப்பிதழ் 2008