வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

Wednesday, October 15, 2008

பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்!


விடிவெள்ளி தெரிகிறது

வந்து பார்


உன் நிலத்தின் பொழியை

நீயே அளந்து கொள்வாய்


நீ உழுது நட்ட பயிர்

கதிரானதும்

நீயே அறுத்து

உன் குதிரில் இடுவாய்


நீ சேர்த்த சொத்து

உன்னோடு இருக்கும்


சொல்லிக்கொள்ளாமல்

அள்ளிக்கொண்டு ஓடும்

நிலை மாறும்


உன் இடத்தில் நீ உலவ

உதவாக்கரை ஒப்புதல்

தேவையில்லை


வேடர்கள் வீழ்ந்து போவர்

வெள்ளி நிலா உலவும்

விண்மீன்கள் சாமரம் வீசும்

வேங்கைகள் நாடாளும்

வீர மறக் கொடி பறக்கும்


தமிழ் வெள்ளம் அருவியாகும்

பாலாறாய்ப் பெருக்கெடுக்கும்


மல்லிகை

மண மணக்கும்

மாஞ்சோலைக்

குயில்கள் கூவும்


வண்ணமயில்

தோகை விரித்தாடும்


உன் பூமியில்

காகம் மட்டுமே கரையும்


ஓலங்கள் ஒழிந்து

ஏலங்கள் குவியும்


துயரங்கள் துடைத்து

துலாபாரம் பெருகும்


கள்ளிச் செடிகளும்

கவி பாடும்


பூங்கொத்துகள்

புன்னகை

பரிமாறிக் கொள்ளும்


தென்றல் மட்டும்

உன்னைத் தீண்டும்


வானவில் உனக்குத்

தோரணம் கட்டும்


மேகங்கள்

பன்னீர் தெளிக்கும்


முல்லைப் பூக்களுக்கும்

முடிசூட்டப்படும்


நீ நாடிய நாடெல்லாம்

உன் நாட்டை நாடும்


பூவரசு

பொன்னரசாகும்


வையம் போற்றும்

வல்லரசாகும்


எள்ளி நகைத்தவர்

ஏமாந்து போவர்


விதைக்காமல்

முளைக் கொட்டும்


பலிபீடம்

பாருக்குள்ளே நல்ல நாடாகும்



39 comments:

said...

அருமையான கவிதை

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டோம்னிக் இராஜசீலன்,
நம்பிக்கையூட்டும் வகையில் எழுதத் தோன்றியது.
என்ன செய்வது. துயரங்கள் வெகு விரைவில் துடைக்கப்பட்டு.
ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Anonymous said...

தமிழர்களுக்கு உற்சாகமூட்டும் பதிவு.
கவிதை அருமை.


விமலன்.

said...

அருமையான கவிதை

said...

//நசரேயன் said...
அருமையான கவிதை//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு நசரேயன்!

said...

அருமையான கவிதை

said...

//விமலன் said...
தமிழர்களுக்கு உற்சாகமூட்டும் பதிவு.
கவிதை அருமை.


விமலன்.//

வாங்க விமலன்! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!

said...

//rahini said...
அருமையான கவிதை
//

ராகினி, வாங்க! நீங்களும் அழகாகக் கவிதை எழுதக்கூடியவர்!!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!

said...

happy new year

deva

said...

///பலிபீடம்
பாருக்குள்ளே நல்ல நாடாகும்///


அருமையான கவிதை
உங்கள் வாக்குப்பலிக்கட்டும் நண்பரே

said...

//thevanmayam said...
happy new year

deva//



வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவா!
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

said...

//தங்கராசா ஜீவராஜ் said...
///பலிபீடம்
பாருக்குள்ளே நல்ல நாடாகும்///


அருமையான கவிதை
உங்கள் வாக்குப்பலிக்கட்டும் நண்பரே//

வருகைக்கு நன்றி ஐயா!
நம் வாக்கு பலிக்கும் என்று நம்புவோம்.

said...

விடிவெள்ளி தெரிகிறது

வந்து பார்///

கவிதை
நல்லாஇருக்குங்க!!
தேவா....

said...

அருமையான கவிதை ஜோதிபாரதி அவர்களே ..

நம்பிக்கை அள்ளி தரும் வரிகள் ..

அன்புடன்
விஷ்ணு

said...

//நிலா பிரியன் said...
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com//




வருகைக்கு நன்றி நிலா பிரியன்!

said...

//thevanmayam said...
விடிவெள்ளி தெரிகிறது

வந்து பார்///

கவிதை
நல்லாஇருக்குங்க!!
தேவா....//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா!

said...

//Vishnu... said...
அருமையான கவிதை ஜோதிபாரதி அவர்களே ..

நம்பிக்கை அள்ளி தரும் வரிகள் ..

அன்புடன்
விஷ்ணு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு!

said...

இயலாமைக்கு தரும் ஆறுதலாகவும், நம்பிக்கை முன்னே வந்து தாலாடும் கவிதையாக உங்கள் கவிதையாக அமைக்கிறது. பாராட்டுக்கள்.
நான் அமீன், கருவறைப் பூக்கள் வெளியிட்டில் நாம் சந்தித்தோம் =)

http://sempulanneer.blogspot.com

said...

//Noorul Ameen said...

இயலாமைக்கு தரும் ஆறுதலாகவும், நம்பிக்கை முன்னே வந்து தாலாடும் கவிதையாக உங்கள் கவிதையாக அமைக்கிறது. பாராட்டுக்கள்.
நான் அமீன், கருவறைப் பூக்கள் வெளியிட்டில் நாம் சந்தித்தோம் =)

http://sempulanneer.blogspot.com//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமீன்!
கருவறைப் பூக்கள் நூல் வெளியீட்டைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
இந்தத் தொடுப்பில் போய் பார்க்கவும்

http://jothibharathi.blogspot.com/2009/01/blog-post_30.html

said...

"ஓலங்கள் ஒழிந்து
ஏலங்கள் குவியும்
துயரங்கள் துடைத்து
துலாபாரம் பெருகும்"

உண்மைதான். துயரந்கள் நீங்கி, வாழ்வு வழம் பெறும் என்ற நம்பி்க்கைதான் வாழ வைக்கும்

said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"ஓலங்கள் ஒழிந்து
ஏலங்கள் குவியும்
துயரங்கள் துடைத்து
துலாபாரம் பெருகும்"

உண்மைதான். துயரந்கள் நீங்கி, வாழ்வு வழம் பெறும் என்ற நம்பி்க்கைதான் வாழ வைக்கும்//

நல்வரவு திரு.டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நம்பிக்கைதான் நமக்கு உத்வேகத்தையும் விவேகத்தையும் கொடுக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

said...

Very wonderful writing!

Thanks for following my blog:))

said...

//Divya said...

Very wonderful writing!

Thanks for following my blog:))//


அன்பின் திவ்யா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

said...

//Valaipookkal said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி ஐயா!

said...

hai frnd, i saw ur blog id in dhivya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

dhivya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

u've to stop this now divya

PLEASE CONSIDER OUR REQUEST

said...

அருமையான வரிகள் தோழா .. வாழ்த்துக்கள்

அதேவேளை
எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி!

Dyena

said...

// //Valaipookkal said...

Hi

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி ஐயா!

February 28, 2009 7:59 AM
Delete
Blogger Lakshmi said...

hai frnd, i saw ur blog id in dhivya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

dhivya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

u've to stop this now divya

PLEASE CONSIDER OUR REQUEST//

Have seen a post there regarding this! Thanks!!

said...

//Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

அருமையான வரிகள் தோழா .. வாழ்த்துக்கள்

அதேவேளை
எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி!

Dyena//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி டயானா!

said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

said...

கவிதை அருமை.
விடிவெள்ளி தெரிகிறது என நம்பிக்கையூட்டி செல்கிறது.தொடர்ந்து வருகிறேன்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com

said...

nambikaitharum varigal

valthukkal jothi bharathi

said...

கவிதை அருமை
sankar

said...

//வேங்கைகள் நாடாளும்
வீர மறக் கொடி பறக்கும்
தமிழ் வெள்ளம் அருவியாகும்//
அருமையான கவிதை தோழரே! ஆனால் இன்று ஈழத்திலிருந்துகொண்டு இதை வாசிக்கும்போது என்னுள் எழும் உணர்வுகள் சொல்லில் வடிப்பது முடியாமலுள்ளது.
அன்புடன்
தணிகாஷ்.

said...

Mrs.Menagasathia said...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
//


:(((

said...

sakthi said...
nambikaitharum varigal

valthukkal jothi bharathi//

நம்பிக்கை தானே வாழ்க்கை...!

said...

ஜகதீஸ்வரன் said...
கவிதை அருமை.
விடிவெள்ளி தெரிகிறது என நம்பிக்கையூட்டி செல்கிறது.தொடர்ந்து வருகிறேன்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com//

:((((

said...

sankarfilms said...
கவிதை அருமை
sankar
//

:(((

said...

அனுபவம் said...
//வேங்கைகள் நாடாளும்
வீர மறக் கொடி பறக்கும்
தமிழ் வெள்ளம் அருவியாகும்//
அருமையான கவிதை தோழரே! ஆனால் இன்று ஈழத்திலிருந்துகொண்டு இதை வாசிக்கும்போது என்னுள் எழும் உணர்வுகள் சொல்லில் வடிப்பது முடியாமலுள்ளது.
அன்புடன்
தணிகாஷ்.//

எங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு தலைமைப் பதவிய ஆக்கிரமிக்கும் தலைவர்கள் இருக்கும் வரை என்ன செய்ய....?

said...

அருமையான கவிதை.
வரிகள் விளாவாரியாக. அருமை.

http://niroodai.blogspot.com/